\"அன்பு லோகேஷ்... \" - கடிதம் எழுதிய கமல்! கலங்கிய லோகேஷ் கனகராஜ்!1448979191
\"அன்பு லோகேஷ்... \" - கடிதம் எழுதிய கமல்! கலங்கிய லோகேஷ் கனகராஜ்! விக்ரம் படம் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் படத்தின் நடிகர், தயாரிப்பாளர் கமல்ஹாசன் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜைப் பாராட்டி எழுதியிருக்கும் கடிதம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தீவிர கமல் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மாநகரம், கைதி, மாஸ்டர் என விகரம் படத்துக்கு முன்பாக தான் இயக்கிய படங்களின் போதே கமல் தான் தனது ஆதர்சம் எனப் பல இடங்களில் தெரிவித்திருக்கிறார். தன் ஆதர்சமான கமலை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததைத் தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என படம் வெற்றி பெற்ற பிறகான கடிதத்தில் எழுதியிருக்கிறார். தற்போது கமல் ஹாசன் தன் ரசிகரும், விக்ரம் பட இயக்குநருமான லோகேஷ் கனகராஜுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தை நெகிழ்ச்சியுடன் லோகேஷ் கனகராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தக் கடிதத்தில், அன்பு லோகேஷ் பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்கா...