Posts

Showing posts with the label #WeatherForecast | #Todayweather | #todayraine

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Image
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் இன்று தென்தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 6, நிலக்கோட்டை, சுருளக்கோடு, வால்பாறையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Image
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழ்நாடு - வட இலங்கை கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியால் இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வானம் 2 நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.