தொடரும் சோகம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு634695204


தொடரும் சோகம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு


சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பி உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்ட வந்தனர். அப்போது 2 தொழிலாளர்களையும் விஷவாயு தாக்கியது. இதனை அறிந்த அப்பகுதியினர் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் சிக்கி இருந்த 2 தொழிலாளர்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரும் தற்போது உயிரிழந்து உள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்த உயிரிழந்த தொழிலாளர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெருங்குடி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments

Popular posts from this blog

Kale and Quinoa Salad #Quinoa

A Complete Madeira Travel Guide #Madeira