மனைவி வெறிச்செயல் !! தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவன் கொலை.. 890806370
மனைவி வெறிச்செயல் !! தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவன் கொலை..
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை, தும்பூர் கிராமத்தில் கிருஷ்ணன் (37) - விஜயலட்சுமி (27) தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஒரு தனியார் செங்கல் சூளையில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களின் சொந்த ஊர் விழுப்புரம் அருகே கெடார் கிராமம். இத்தம்பதியின் 2 மகன் மற்றும் ஒரு மகள் பாட்டி வீட்டில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
கிருஷ்ணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்ப செலவுக்கு மனைவியிடம் பணம் தராமல் கிருஷ்ணன் குடிபோதையில் வாய்த்தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை குடிபோதையில் வீடு திரும்பிய கிருஷ்ணன், உணவு சமைக்கவில்லையா எனக் கேட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் மனைவியை கிருஷ்ணன் சரமாரி தாக்கிவிட்டு அங்கேயே படுத்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி, தனது கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலைசெய்தார். கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், கிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவி விஜயலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Comments
Post a Comment