1000 ஊழியர்களை வேலை விட்டு நீக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் – பணியாளர்கள் அதிர்ச்சி!!1301932396

1000 ஊழியர்களை வேலை விட்டு நீக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் – பணியாளர்கள் அதிர்ச்சி!!
உலகளவில் உள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது 1000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. தொடர்ந்து பல ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வேலை நீக்கம் செய்து வரும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த மந்த நிலையால் ஐடி மற்றும் டெக் நிறுவனத்தில் பல ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பையும் ஐடி நிறுவனங்கள் குறைத்துள்ளது. அந்த வகையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட முன்னணி ஐடி நிறுவனங்களான டெஸ்லா, ஆப்பிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகுள், நெட்பிளிக்ஸ் ஆகியவை பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
அதன் படி மைக்ரோசாப்ட் நிறுவனம் XBOX, EDGE குறிப்பிட்ட பல அணிகளில் இருந்து சுமார் 1000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், லாபம் மற்றும் வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவின் காரணமாக ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது SURFACE கணினி பிரிவில் Surface Laptop 5, Surface 9 Pro tablet, Studio 2+ என புது வரவுகளை அறிமுகம் செய்துள்ளது. அதனால் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலையை அந்நிறுவனம் கண்டுள்ளது. இந்த காரணத்தால் தான் 1000 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் தகவல் தொழில்நுட்பதுறை ஊழியர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
Comments
Post a Comment